யாரும் எதிர்ப்பாராத நேரத்தில் 175 ஏக்கர் நிலத்தை ராணுவ வீரர்களுக்கு வழங்கிய நடிகர்!!

798

நடிகர் சுமன்

பிரபல நடிகர் சுமன். 80களில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்தவர். தற்போது குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார். தற்சமயம் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் வாட்ச்மேன் படத்தில் நடித்து முடித்துள்ள இவர் அப்படத்தின் அறிமுக நிழ்ச்சியில் பேசியதாவது,

இந்த படத்தில் எனக்கு நல்ல ஒரு கதாப்பாத்திரத்தையும், அதை சிறப்பாக செய்ய சுதந்திரத்தையும் கொடுத்த விஜய்க்கு நன்றி. 9 மொழிகளில் 450 படங்களில் நடித்திருக்கிறேன். தமிழ் சினிமாவில் நடிப்பது எப்போதுமே எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயம். இந்த கதை மிகவும் புதுமையாக இருந்தது.

நமது நாட்டின் உண்மையான வாட்மேன்கள் ராணுவ வீரர்கள்தான். நாம் நிம்மதியாக வாழ அவர்கள் உறையும் பனியில் காவல் புரிகிறார்கள். அவர்களுக்குள் ஜாதி, மத பேதமில்லை. ஆனால் நாம்தான் ஜாதி, மதத்தின் பெயரால் கலவரம் செய்து கொண்டிருக்கிறோம்.

அவர்களுக்கு என்னால் முடிந்த உதவி செய்ய முடிவு செய்தேன். அதன்படி சினிமா ஸ்டூடியோ கட்ட ஐதராபாத் அருகே நான் வாங்கிய 175 ஏக்கர் நிலத்தை இந்தியாவின் வாட்ச்மேன்களாக இருக்கும் ராணுவ வீரர்களுக்கு தானமாக கொடுக்க இருக்கிறேன் என்றார் சுமன்.