இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட பெளத்த புனித சின்னங்கள் கம்போடியாவில் திருட்டு!!

459

budhaஇலங்­கை­யி­லி­ருந்து கம்­போ­டி­யா­வுக்கு கொண்டு வரப்­பட்ட கெளதம புத்­தரின் கேசம் பற்கள், எலும்­பு­களைக் கொண்ட தங்கப் பேழை­யொன்றை தேடி வரு­வ­தாக கம்­போ­டிய பொலிஸார் ஞாயிற்றுக்­கி­ழமை தெரி­வித்­தனர்.

மேற்­படி மலைப் பிராந்­திய புனித ஸ்தல­மொன்­றி­லி­ருந்து களவாடப்­பட்ட அநேக சிறிய திரு­வு­ருவ சிலைகள் கடந்த வாரம் உடோங் நகரில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்ள போதும் புனித சின்­னங்­க­ளைக்­கொண்ட பேழை­யைக்­ கண்டுபிடிக்க முடி­ய­வில்லை என அந்­நாட்டு பொலிஸ் பேச்­சாளர் கிர்த் சந்­தாரித் கூறினார்.

அந்தப் பேழை எங்­கி­ருக்­கி­றது என்­பது எமக்குத் தெரி­ய­வில்லை. நாம் அதனைத் தொடர்ந்து தேடி வரு­கிறோம் எனக் கூறிய சந்­தாரித் மேற்­படி திருட்­டுடன் தொடர்­பு­டைய 5 காவ­லர்­களை கைது செய்­துள்­ள­தாக தெரி­வித்தார்.

இந்த புனித சின்னங்கள் 1950களில் புத்­தரின் 2500வது பிறந்த தினத்தைக் குறிக்கும் வகையில் இலங்­கை­யி­லி­ருந்து கம்­போ­டி­யா­வுக்கு கொண்டு வரப்­பட்­ட­தாக நம்­பப்­ப­டு­கி­றது.

மேற்­படி புனித சின்­னங்கள் 2002 ம் ஆண்டில் மறைந்த மன்னர் நொரோடம் சிஹ­ளோக்கால் கம்­போ­டிய தலை­ந­க­ரி­லி­ருந்து உடோங் பிராந்­தி­யத்­தி­லுள்ள புனித ஸ்தலத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். அந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றிருந்தனர்.