பேரறிவாளன் உட்பட 14 பேரின் கருணை மனு, ஜனவரியில் தீர்ப்பு : தலைமை நீதிபதி சதாசிவம்!!

1442

sadhasivamராஜிவ் காந்தி படுகொலை தொடர்பில் மரணதண்டனை கைதியான பேரறிவாளன் உள்ளிட்ட 14 பேரின் கருணை மனுக்கள் மீதான விசாரணை முடிந்து விட்டதாகவும், அடுத்த மாதம் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மாநில சட்ட பயிற்சி மையத்தின் சார்பில் நடத்தப்படும் வழக்கறிஞர்களுக்கான பயிற்சி திட்டத்தை நேற்று ஞாயிற்றுக்கிழமை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் சென்னையில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர்..

மரண தண்டனை பெற்றுள்ளவர்களின் கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் மத்திய, மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 14 பேரின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

அவர்கள் கருணை மனு மீதான பரிசீலனை 13 ஆண்டுகளாக நடந்து வந்தது. தற்போது விசாரணை முடிந்துள்ளது. ஜனவரி மாதம் இதுகுறித்து உச்சநீதிமன்றம் தனது முடிவை அறிவிக்கும் என்றார்.