போர்க்காலத்தை போன்று தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர் : ஜெயலலிதா குற்றச்சாட்டு!!

599

Jeyalalithaபோர்க்காலத்தை போன்று தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடத்திச் செல்கின்றனர் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்தநிலையில் அயல்நாடு என்ற அடிப்படையில் இந்திய மத்திய அரசாங்கம் இந்த ஏதேச்சதிகார போக்கை கண்டுகொள்ளாமல் இருப்பதாக ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தில் தலையிட்டால் இலங்கையுடனான உறவு பாதிக்கப்படும் என்று இந்திய மத்திய அரசாங்கம் எண்ணுவதாகவும் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி கடிதங்களை அனுப்பியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் முன்னால் இந்தியா துவண்டுபோயுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

மீனவர்களின் பிரச்சினைகளை களைவதற்காக இரண்டு நாட்டு மீனவர்கள் மத்தியில் பேச்சுவார்த்தை ஒன்றை இந்திய மத்திய அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யமுடியாமல் போயுள்ளமையையும் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில் ராஜபக்சவின் அரசாங்கத்தினால் 140 தமிழக மீனவர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக ஜெயலலிதா குற்றம் சுமத்தியுள்ளார்.