ஜெயலலிதா கடிதம் மாத்திரமே எழுதுகிறார் : நாராயணசாமி குற்றச்சாட்டு!!

515

Narayanaswamyதமிழக மீனவர்கள் தாக்கப்படும் விஷயத்தில் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதுவதோடு மட்டும் முதல்வர் ஜெயலலிதா நிறுத்திக் கொள்வதாக மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசியதாவது..

இலங்கை கடற்படையினர் மற்றும் அந்நாட்டு மீனவர்களால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க இரு நாட்டு மீனவ பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

இதற்கான திகதியை தமிழக அரசு முடிவு செய்ய வேண்டும். பல நாட்கள் ஆகியும் இதுவரை திகதி முடிவு செய்யப்படவில்லை.
தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விஷயத்தில் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதுவதோடு மட்டும் முதல்வர் ஜெயலலிதா நிறுத்திக் கொள்கிறார் என்று நாராயணசாமி கூறினார்.