முல்லைத்தீவில் உயரழுத்த மின்கம்பத்தில் மோதி தப்பிச் சென்ற கப் ரக வாகனம்!!

220

தப்பிச் சென்ற கப் ரக வாகனம்

முல்லைத்தீவு ஐயன்கன் குளம் புத்துவெட்டுவான் பிரதான வீதியில் சட்டவிரோதமான முறையில் காட்டு மரங்களை ஏற்றிச் சென்ற கப் ரக வாகனம் நேற்று இரவு உயரழுத்த மின்கம்பத்தை மோதி தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

குறித்த கப் ரக வாகனத்தினை பொலிஸார் துரத்திச் சென்ற நிலையிலேயே இவ்வாறு மின்கம்பத்தில் மோதுண்டு தப்பிச் சென்றுள்ளது.

முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஐயன்கன் குளம் புத்துவெட்டுவான் பிரதான வீதியில் சந்தேகத்திற்கிடமாக பயணித்த வாகனத்தினை பொலிஸார் இடைமறித்து சோதனையிட முயற்சித்துள்ளனர்.

எனினும், குறித்த கப் வாகனம் தப்பிச் சென்ற நிலையில் பொலிஸார் துரத்தியபோதும் பிரதான வீதிக்கருகில் கானப்பட்ட உயரழுத்த மின் கம்பத்தை மோதித் தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

இதனால் அந்த பகுதிக்கான மின்சாரம் முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஐயன்கன் குளம் பொலிசார் குறித்த வாகனத்தையும் அதன் சாரதியையும் கைதுசெய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.