37 கிலோ கேரள கஞ்சாவுடன் மன்னாரில் இருவர் கைது!!

627

kanchaமன்னாரில் 35 கிலோ 750 கிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று அதிகாலை 05.30 அளவில் கைது செய்யப்பட்டதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 53 மற்றும் 36 வயதுடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் வத்தளை மற்றும் கல்முனை பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். சந்தேகநபர்கள் இன்று மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.