தோல்விக்கு வீரர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும் : அஸ்வின்!!

561

Ashwinதென் ஆபிரிக்காவிடம் மோசமாக தோற்றதற்கு வீரர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும், பயிற்சியாளரை குறைகூற கூடாது என இந்திய அணி வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

தென் ஆபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்தது. இந்நிலையில் இவ்விரு அணிகளும் மோதும் டெஸ்ட் போட்டி வருகிற 18ம் திகதி தொடங்குகிறது.

இதுகுறித்து இந்திய அணி வீரர் அஸ்வின் தோல்விக்காக பயிற்சியாளரை குறை கூற வேண்டாம், வீரர்கள்தான் அதற்கு பொறுப்பு என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி தோல்வியை தழுவதற்கு வீரர்கள்தான் காரணம் என்று குற்றம்சாட்ட வேண்டும். பயிற்சியாளர் சிறப்பாக பந்து வீசவும், துடுப்பெடுத்தாடவும் நுணுக்கங்களை கூறுவார்.

அதை சிறப்பாக செய்யாவிட்டால் வீரர்கள் தான் அதற்கு பொறுப்பு, பயிற்சியாளரை குற்றம் சாட்டுவது சரியில்லை என்றும் தெரிவித்துள்ளார்.