சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு வந்த பரிதாப நிலை!!

500

நாம் தமிழர் கட்சி

தமிழகத்தில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் சின்னம் தொடர்பான பிரச்சனையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சீமான் யாரைப் பற்றி எல்லாம் பேசப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற இடைத் தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. போனமுறை போட்டியிட்ட அதே மெழுகுவர்த்தி சின்னத்தை இப்போது தருமாறு தேர்தல் ஆணையத்திடம் நாம் தமிழர் கட்சி கேட்டது.

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த தேர்தல் ஆணையம், கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கியது. இருப்பினும் மிக குறைந்த நாளில் அந்த சின்னத்தை சீமானும், அவர் கட்சி வேட்பாளர்களும் மக்களிடையே கொண்டு சேர்த்து விட்டனர்.

இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பெயர், சின்னம் ஆகியவை அச்சிடப்பட்ட பேப்பர்கள் ஒட்டுவது வழக்கம். அப்படி ஒட்டியதில் கரும்பு விவசாயி சின்னம் தெளிவாக இல்லை என்பதால், என் சின்னம் தவிர மற்ற எல்லா சின்னமும் பளிச்சென்று தெரிகிறது.

அது ஏன் சுயேச்சை சின்னம்கூட பளிச்னு தெரிகிறது. நான் ஒரு சாதாரண பையன் என்னை பார்த்து நீ எவ்ளோ நடுங்குறே நல்ல ஆத்தாளுக்கும், அப்பனுக்கும் பிறந்திருந்தா நின்னு விளையாட விடணும்டா. என்னை விளையாட விட்டுட்டு பாரு. அந்த துணிவு இல்லையா உனக்கு என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

இதுமட்டுமில்லாமல், தங்களின் சின்னம் தெளிவாக இருக்குமாறு செய்ய தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி மனு தாக்கல் செய்தது. ஆனால் இந்த வழக்கையே நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்துவிட்டது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடிய போது, அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று நீதிமன்றம் கூறிவிட்டது. தங்கள் கோரிக்கையை தேர்தல் ஆணையமும் கண்டுகொள்ளாமல், நீதிமன்றமும் கைவிட்டதால் நாம் தமிழர் கட்சி தற்போது கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் சிறியதாகவும், தெளிவற்றும், மங்கலாகவும், கண்ணுக்கே தெரியாத வகையில் கரும்பு விவசாயி சின்னம் அச்சடித்திருப்பது நியாயமா என்ற கேள்வியையும் சீமான் நாளைய பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் முன்வைப்பார் என்று தெரிகிறது.

அதேபோல, நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க விரும்பும் முதியவர்கள், படிக்காத பாமரர்கள், கண்பார்வை குறைபாடு உடையவர்கள் விவசாயி சின்னத்தைக் கண்டறிந்து எப்படி வாக்களிப்பார்கள் என்றும் கேள்வி எழுப்புவார் என கூறப்படுவதால், நாளைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் அனல் பறக்கும் என்று கூறப்படுகிறது.