நயன்தாராவுடன் நடிக்க ஆசைப்படும் சிவகார்த்திகேயன்!!

291

siva-nayanஎதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படங்கள் சிவகார்த்திகேயனை மேன்மேலும் அதிக உயரத்துக்கு அழைத்துச் சென்றன. அதன் விளைவாகத்தான் மான் கராத்தே படத்தில் ஹன்சிகாவுடன் நடித்துக் கொண்டிருக்கிறார் சிவா.

இதற்கடுத்து, துரை.செந்தில்குமார் இயக்கும் புதிய படத்தில் அமலாபாலும், பொன்.ராம் இயக்கும் டாணாவில் தமன்னாவும் நடிக்கிறார்கள்.

ஹன்சிகா, அமலாபால், தமன்னா என்று சிவாவின் கிராஃப் ஏறிக்கொண்டே இருப்பதை கோடம்பாக்கத்தில் ஆச்சர்யத்தோடு பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

எனக்குப் பிடித்த நடிகை நயன்தாரா என்று பேட்டிகளில் சொல்ல ஆரம்பித்த சிவா இப்போது நயன்தாராவுடன் நடித்தே தீருவது என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.