அஜித்தின் வீரம் படத்தின் பாடல்கள் டிசம்பர் 20ல் வெளியீடு!!

485

veeramஆரம்பம் படத்திற்கு பிறகு அஜித் நடித்துள்ள படம் வீரம். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பாரதி ரெட்டி, வெங்கட்ராம ரெட்டி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளது. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். மேலும், சந்தானம், விதார்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பொங்கல் வெளியீடாக வரவுள்ள இப்படத்தின் இசையை வருகிற 20ம் திகதி வெளியிடவுள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்கள் விநியோக உரிமையை ஜுங்கிலி நிறுவனம் வாங்கியுள்ளது.

இப்படத்தில் அஜித் ரசிகர்களை கவரும் வண்ணம் மாஸ் பாடல்களை அமைத்துள்ளார் தேவிஸ்ரீ பிரசாத். அவரது இசைப்பயணத்தில் இந்த படம் ஒரு மைல் கல்லாக இருககும் என்று இயக்குனர் சிவா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஜனவரி 10ம் திகதி உலகமெங்கும் வீரம் படம் வெளிவருகிறது. இப்படம் பாடல்களில் மட்டுமின்றி, கதை அமைப்பிலும், காட்சியமைப்பிலும் மிக பிரம்மாண்டமாக, ஜனரஞ்சமாக இருக்கும் என்று மேலும் அவர் கூறினார்.