சென்னை சர்வதேச திரைப்பட விழா : பெசன்ட் நகர் கடற்கரையில் ஜூம்பா நடனம்!!

621

CFF11வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 12ம் திகதி தொடங்கி சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த திரைப்பட விழாவில் உலகின் பல்வேறு மொழி திரைப்படங்கள் சென்னையில் குறிப்பிட்ட திரையரங்குகளில் பார்வையாளர்களுக்கு திரையிடப்பட்டு வருகிறது.

மறுபுறம் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் விதமாக சென்னையில் பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றன. அந்த வரிசையில் இன்று சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் ஜூம்பா நடன கலை நிகழ்ச்சியை இவ்விழா குழுவினர் நடத்தினர்.

இதில் நடிகைகள் சுஹாசினி, அனிதா ரத்னம், பூர்ணிமா பாக்யராஜ், தொகுப்பாளினி ரம்யா, நடிகர்கள் சாந்தனு, ராகவ், அசோக் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். இவர்கள் பொதுமக்கள் முன்பு நடனம் ஆடி அனைவரையும் கவர்ந்தனர். இந்த நிகழ்ச்சியை சென்னை தெற்கு மண்டல போக்குவரத்து துணை கமிஷ்னர் லட்சுமி தொடங்கி வைத்தார்.