தனியார் துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் : அதிகரிக்கப்படும் சம்பளம்!!

586

அதிகரிக்கப்படும் சம்பளம்

தனியார்துறை ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மே மாதம் முதலாம் திகதியில் இருந்து அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார்.

ஊழியர்களின் அடிப்படை சம்பளம் தற்போது பத்தாயிரம் ரூபாவாக காணப்படுகிறது. அதனை 12500 ரூபாய் வரை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பள அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி விரைவில் வெளியிடப்படவுள்ளது. அதன் பின்னர் உத்தியோகபூர்வமாக தனியார் துறையினரின் அடிப்படை சம்பளம் அதிகரிக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.