சென்றவார தொடர்ச்சி..
51. செய்யுளில் முதற் சீரின் முதலெழுத்தோடு பின்வரும் சீர்கள் ஒன்றோ பலவோ முதலெழுத்து ஒன்றி வருவது?
மோனை
52.”ஆடையின்றி வாடையின் மெலிந்து கையது கொண்டு” பாடலின் ஆசிரியர்?
சத்திமுத்தப் புலவர்
53. ”நாள்” எனும் வாய்ப்பாட்டின் இலக்கணம்?
நேர்
54. வெண்பா எத்தனை வகைப்படும்?
5
55. அடியின் வகை?
5
56. வஞ்சிப்பாவின் ஓசை?
தூங்கலோசை
57. இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும்?
3
58. இலக்கண முறைப்படி இல்லையாயினும் இலக்கணமுடையவை போல தோன்றுவது?
இலக்கணப்போலி
59. சான்றோர் அவையில் பயன்படுத்த இயலா சொல்லை வேறு சொற்களால் பயன்படுத்துவது?
இடக்கரடக்கல்
60. வலிமிகுந்த சொல்லுக்கு எடுத்துக்காட்டு?
பலாச்சுளை
61.”திருமுருகாற்றுப்படை” எனும் நூலின் ஆசிரியர்?
நக்கீரர்
62. அகத்தியர் சைவ சமயக் குரவர்கள் கூட்டதில் சேராதவர். சரியா? தவறா?
சரி
63. தைத் திங்கள் முதல் நாள் கொண்டாடப்படும் விழா?
பொங்கல்
64. பரணர் எம்மன்னனின் சம காலத்தவர்?
கரிகாலன்
65. பொய்கையார் இயற்றிய இலக்கியம்?
களவழி நாற்பது
66. வாகைப் பரந்தலை போரை நடத்திய மன்னன்?
கரிகாலன்
67.முதல் சங்கத்தைத் தோற்றுவித்த மன்னன்?
காய்ச்சின வழுதி
68. பல்யானை செங்குட்டுவன் தந்தை?
உதயஞ்சேரலாதன்
69. கரூரைத் தலைநகராகக் கொண்ட மன்னர் பிரிவு?
இரும்பொறை பிரிவு
70. தகடூரை ஆண்ட அதியமானை வென்ற சேரன்?
பெருஞ்சேரல் இரும்பொ
71.கரிகாலனைப் பேரரசராக அறிவிக்க உதவிய போர்?
வெண்ணிப் போர்
72. திருமாவளவன் என்ற பெயர் கொண்ட சோழன்
கரிகாலன்
73. கோச்செங்கெணன் என்ற சோழ மன்னனை பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட இலக்கியம்?
களவழி நாற்பது
74. கோவூர்கிழார் எவ்விரு சோழ அரசர்களிடையே போர் சமாதானம் செய்தார்?
நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி
75. கொல்லிமலை ஆண்ட சிற்றரசர்?
ஓரி
76. ”ஆய்” என்ற மன்னர் ஆட்சி புரிந்த மலை?
பொதிகை மலை
77. பரம்பு மலையை ஆண்ட மன்னர்?
பாரி
78. திருக்கோவிலூர் பகுதியை ஆண்ட மன்னன்?
காரி
79.இனிமைத் தமிழ் மொழி எது?-எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர்?
பாரதிதாசன்
80.”கனியுண்டு”-இச்சொல்லின் இலக்கணம்?
உரிச்சொல்
81.மயொங்கொலி எழுத்துக்களின் எண்ணிக்கை?
8
82. ”காண்போம் படிப்போம்”-இப்பாடத் தலைப்பு தொடரில் அமைந்துள்ள இலக்கணம்?
முற்றெச்சம்
83. ”மானின் விடுதலை”-கதைப் பாடலின் ஆசிரியர்?
அழ. வள்ளியப்பா
84. ”மாற்றானுக்கு இடம் கொடேல்”-போன்ற முதுமொழிகள் மாணவர்களுக்கு உணர்த்துவது?
நன்னெறி
85. ”தென்னை மரத்தின் ஓலைகள் நிலவொளி மென்காற்றில் சலசலக்கும்”-இதில் உள்ள ”சலசலக்கும்” என்பது?
இரட்டைக்கிளவி
86. ”செந்தமிழ் நாடெனும் போதினிலே”-பாடலின் ஆசிரியர்?
பாரதியார்
87.”புதியதோர் உலகம் செய்வோம்” எனப் பாடி முழங்கியவர்?
பாரதிதாசன்
88. ”தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு” எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர்?
கவிமணி
89. ”மறவன்” எனும் சொல்லின் பொருள்?
வீரன்
90. ”கொன்றை வேந்தன்”-ஆசிரியர்?
அவ்வையார்
91. ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதை எழுதியவர்?
திருவள்ளுவர்
92. தமிழைப் போன்று மிகப் பழமையான மொழிகளில் ஒன்று?
லத்தீன்
93. ”பிச்சி” என்னும் சொல்லின் பொருள்?
முல்லை
94. மயிலுக்குப் போர்வை ஈந்த வள்ளல்?
பேகன்
95. இடைச்சங்கம் இருந்த இடம்?
கபாட புரம்
96.”சித்திரப்பாவை”-ஆசிரியர்?
அகிலன்
97. ”திருவிளையாடற் புராணம்”-ஆசிரியர்?
பரஞ்சோதி முனிவர்
98. ”பெண்ணின் பெருமை”-ஆசிரியர்?
திரு.வி.க.
99. ”பாஞ்சாலி சபதம்” -ஆசிரியர்?
பாரதியார்
100. இந்திய விடுதலைக்குப் பின் தமிழ் நாட்டின் முதல் அமைச்சரவைக் கவிஞராக இருந்தவர்?
நாமக்கல் கவிஞர்
தொடர்ந்து வரும்..