சென்றவார தொடர்ச்சி..
101.”ஆ” என்ற ஓரெழுத்து ஒரு மொழியைக் குறிக்கும் சொல் எது?
பசு
102. இசையை வெளிப்படுத்தும் சொல் எது?
பாடு
103. ”கட கட” என்பது?
இரட்டைக்கிளவி
104. ”முகமை” என்பதன் பொருள் என்ன?
கிடங்கு
105. திடீரென வீசிய சூறைக்காற்றால் வாழை ____________ அழிந்தது.
தோப்பு
106. ”அருகில் நிற்கும் மரங்களை அசைத்தே ஆடச் செய்தவன் யார்?” என்று பாடியவர் யார்?
அழ. வள்ளியப்பா
107. ”மாரிக் காலம்” என்றால் என்ன?
மழைக்காலம்
108. அ___ல் எங்கே போகிறது?
ணி
109. இ___ ___ ர். பூர்த்தி செய்க?
ள, நீ
110. பணிப்பென் என்பதன் பொருள் என்ன?
வேலைக்காரி
111. சரஸ்வதிக்கு கோயில் உள்ள இடம்?
கூத்தனூர்
112. இராமாயணத்தில் விஷ்ணுவின் தனுசை பூட்டி வைத்துக் கொள்ளுமாறு கூறியவர் யார்?
பரசுராமன்
113. ராகங்கள் மொத்தம் எத்தனை?
16
114. மகாபாரதத்தில் கிருஷ்ணன் எந்த மலையைத் தூக்கிக் குடையாகப் பிடித்தார்?
கோவர்த்தன மலை
115. செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் எந்த ஆண்டு முதல் இயங்கி வருகிறது?
2008
116. ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்னும் பண்பாட்டு செறிவு மிக்க மொழி எது?
தமிழ்
117. மூதுரையை இயற்றியவர் யார்?
அவ்வையார்
118. யாருக்கு செய்த உதவி கல்மேல் எழுத்து போல நிலைத்து நிற்கும்?
நல்லவர்
119. ”மூதுரை”-இயற்றியவர்?
அவ்வையார்
120.”பாண்டியன் பரிசு”-இயற்றியவர்?
பாரதிதாசன்
121.”திருக்குறள்”-இயற்றியவர்?
திருவள்ளுவர்
122.”நறுந்தொகை”-இயற்றியவர்?
அதிவீரராம பாண்டிய
ன்
123. காலையில் __________ நன்று?
படித்தல்
124. மாலையில் _____________ சிறந்த உடற்பயிற்சி?
விளையாடுதல்
125. தமிழன் மானத்தைப் பெரிதெனக் கருதி ____________ இழப்பான்.
உயிர்
126. வெற்றி வேற்கையை இயற்றியவர் யார்?
அதிவீரராம பாண்டியன்
127. பிறரிடம் தமிழன் __________ வாங்கிட கூசிடுவான்?
தானம்
128. பொம்மைகளைக் கண்டு மயங்காத ____________ உண்டோ?
குழந்தைகள்
129. அறிவியல் பாடங்களைப் படித்தால் அறிவு _________?
வளரும்
130. வேளாண்மையில் ___________ முறைகளைப் புகித்திட வேண்டும்?
இயற்கை
131. தங்கத்தின் விலை _______ கொண்டிருக்கிறது?
ஏறி
132. சொற்கள் எத்தனை வகைப்படும்?
4
133. காலத்தைக் காட்டும் சொல்லுக்கு என்ன பெயர்?
வினைச் சொல்
134. காலம் எத்தனை வகைப்படும்?
3
135. ”இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை இயற்றினார்”-இது எந்த காலத்தைக் குறிக்கிறது?
இறந்த காலம்
136. ”மருமக்கள் வழிமான்மியம்” என்ற நூலை இயற்றியவர்?
கவிமணி தேசிக விநாயகம்
137. நன்செய்யும் ____________ நாட்டுக்கு அழகு?
புன்செய்
138. இரவு _______ பாராது உழைத்தால் முன்னேறலாம்.
பகல்
139. மாணவர்களில் பலர் விளையாடச் சென்றனர். _______ விளையாடச் செல்லவில்லை.
சிலர்
140. செஞ்சிக் கோட்டை எந்த மாவட்டத்தில் உள்ளது?
விழுப்புரம்
141.திருக்குறளின் சிறப்புப் பெயர்கள்?
உலகப்பொதுமறை
தெய்வநூல்
முப்பால்
உத்திரவேதம்
பொய்யாமொழி
வள்ளுவப்பயன்
142. சிலப்பதிகாரத்தின் சிறப்புப் பெயர்கள்?
குடிமக்கள் காப்பியம்
ஒற்றுமைக் காப்பியம்
மூவேந்தர் காப்பியம்
முதல் காப்பியம்
தேசியக் காப்பியம்
முத்தமிழ்க் காப்பியம்
சமுதாயக் காப்பியம்
143. சீவக சிந்தாமணியின் சிறப்புப் பெயர்கள்?
மணநூல்
முக்தி நூல்
144. அகநானூற்றின் சிறப்புப் பெயர்?
நெடுந்தொகை
145. பெரிய புராணத்தின் சிறப்புப் பெயர்?
திருத்தொண்டர் புராணம்
146. இலக்கண விளக்கத்தின் சிறப்புப் பெயர்?
குட்டித் தொல்காப்பியம்
147. வெற்றி வேற்கையின் சிறப்புப் பெயர்?
நறுந்தொகை
148. மூதுரையின் சிறப்புப் பெயர்?
வாக்குண்டாம்
149. மணிமேகலையின் சிறப்புப் பெயர்?
மணிமேகலைத் துறவு
150. நாலடியாரின் சிறப்புப் பெயர்?
வேளாண் வேதம்
தொடர்ந்து வரும்…