சென்றவார தொடர்ச்சி..
151. திருமந்திரத்தின் சிறப்புப் பெயர்?
தமிழ் மூவாயிரம்
152. முதுமொழிக் காஞ்சியின் சிறப்புப் பெயர்?
அறிவுரைக் கோவை
153. தமிழ்த் தென்றல் என அழைக்கப்படுபவர் யார்?
திரு.வி.கலியாண சுந்தரம்
154. தமிழ்த்தாத்தா என அழைக்கப்படுபவர் யார்?
உ.வே.சாமிநாதர்
155. நவீனக் கம்பர் என அழைக்கப்படுபவர் யார்?
மீனாட்சி சுந்தரனார்
156. பண்டித மணி என அழைக்கப்படுபவர் யார்?
கதிரேசஞ் செட்டியார்
157. தமிழ் நாடகத் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
பம்மல் சம்பந்தனார்
158. தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் என அழைக்கப்படுபவர் யார்?
சங்கரதாஸ் சுவாமிகள்
159. பாரதிதாசனின் சிறப்புப் பெயர்கள்?
புரட்சிக் கவி, பாவேந்தர், புதுவைக் குயில்
160. கவிமணி என்ற சிறப்பிற்குரியவர்?
தேசிக விநாயகம் பிள்ளை
161.நாமக்கல் கவிஞர் என்று அழைக்கப்பட்டவர்?
வெ. இராமலிங்கம் பிள்ளை
162. குழந்தைக் கவிஞர் என்ற சிறப்பிற்குரியவர்?
அழ. வள்ளியப்பா
163.தொண்டை சீர் பரவுவார் என்று அழைக்கப்பட்டவர்?
சேக்கிழார்
164. திராவிட சிசு என்ற சிறப்பிற்குரியவர்?
திருஞானசம்பந்தர்
165. திருநாவுக்கரசரின் சிறப்புப் பெயர்கள்?
வாகீசர், தருமசேனர், அப்பர்
166. மாணிக்கவாசகரின் சிறப்புப் பெயர்?
அமுது அடியடைந்த அன்பர்
167. தம்பிரான் தோழர் எனப்படுபவர் யார்?
சுந்தரர்
168. கவிச்சக்கரவர்த்தி என்ற சிறப்புடையவர்?
கம்பர்
169. ஒட்டக்கூத்தரின் சிறப்புப் பெயர்?
கவிராட்சஸன்
170. பகுத்தறிவுக் கவிராயர் என்று அழைக்கப்படுபவர் யார்?
உடுமலை நாராயணகவி
171. திரையிசைத் திலகம் யார்?
மருதகாசி
172. _____அவையில் அஷ்டதிக்கஜங்கள் எனப்படும் எட்டு அறிஞர்கள் இடம் பெற்றிருந்தனர்?
கிருஷ்ணதேவராயர்
173. தமிழ்நாட்டில் சங்ககாலப் பாண்டியரின் ஆட்சிக்காலத்தில் மதுரைக்கு வந்தவர்?
மெகஸ்தனிஸ்
174. ”வாரணம் ஆயிரம்” என்ற பாசுரத்தைப் பாடியவர் யார்?
ஆண்டாள்
175. ”மாதனு பங்கி” என்றழைக்கப்படுபவர்?
திருவள்ளுவர்
176. செஞ்சியை ஆண்ட மன்னர்களில் _____தான் புகழ் பெற்ற மன்னன்?
தேசிங்கு ராசன்
177. ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்னும் பண்பாட்டு செறிவு மிக்க மொழி எது?
தமிழ்
178. பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடு? 1)பெறு 2)நடு 3)சுடு 4)பேறு
பேறு
179. பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடு? 1)தழால் 2)வெகுளி 3)மாட்சி 4)உணர்ச்சி
மாட்சி
180.”வானினும்” – இலக்கணக் குறிப்பு தருக?
உயர்வுச் சிறப்பும்மை
181. கள்ளைச் ”சொல் விளம்பி” என்று கூறுவது?
குழூஉக்குறி
182. ”கதவில்லை” – இத்தொடரில் அமைந்த புணர்ச்சி?
முற்றியலுகரப் புணர்ச்சி
183. இடையுகரம் இய்யாதலுக்கு எடுத்துக்காட்டு?
கரியன்
184. ஆதிநீடலுக்கு எடுத்துக்காட்டு?
பாசடை
185. அடியகரம் ஐயாதலுக்கு எடுத்துக்காட்டு?
பைந்தமிழ்
186. தன்னொற்றிரட்டலுக்கு எடுத்துக்காட்டு?
வெற்றிலை
187. இயற்சொல்லுக்கு எடுத்துக்காட்டு?
மரம்
188. திரிசொல்லுக்கு எடுத்துக்காட்டு?
மஞ்ஞை
189. திசைச்சொல்லுக்கு எடுத்துக்காட்டு?
பெற்றம்
190. வடசொல்லுக்கு எடுத்துக்காட்டு?
மதம்
191. ”நல்குரவு” – எதிர்ச்சொல் தருக?
வலிமை
192. ”கேளிர்” – எதிர்ச்சொல் தருக?
பகை
193. “மகிழ்ச்சி” எனும் பொருள் தரும் ஓரெழுத்து ஒரு மொழி எது?
ஓ
194. ”தே” எனும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய சொல் எது?
அருள்
195. ”வெகுளி” என்னும் தொழ்ற்பெயரின் வேர்ச்சொல் அறிக?
வெகுள்
196. முதனிலைத் திரிந்த தொழிற்பெயருக்கு எடுத்துக்காட்டு?
கேடு
197. ”எல்” எனும் சொல்லின் பொருள்?
கதிரவன்
198. “எள்” எனும் சொல்லின் பொருள்?
எண்ணை வித்து
199. ”சுளி” எனும் சொல்லின் பொருள்?
சினத்தல்
200. “சுழி” எனும் சொல்லின் பொருள்?
கடல்
தொடர்ந்து வரும்..