பொதுஅறிவு – தெரிந்துகொள்ளுங்கள்!!

2374


logo

சென்றவார தொடர்ச்சி..



201. ஐகாரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு?
தலைவன்

202. ஒளகாரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு?
வெளவால்



203. ஆய்தக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு?
முஃடீது



204. மகரக்குறுக்கத்திற்கு எடுத்துக்காட்டு?
போனம்


205. ”புத்தக சாலை” எனும் நூலின் ஆசிரியர்?
பாரதிதாசன்

206. “தீக்குச்சிகள்” எனும் நூலின் ஆசிரியர்?
அப்துல் ரகுமான்


207. “சிக்கனம்” எனும் நூலின் ஆசிரியர்?
சுரதா

208. “நாடு” எனும் நூலின் ஆசிரியர்?
வாணிதாசன்

209. அசதி, அக்கா, அச்சம், அகம் – அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க?
அகம், அக்கா, அசதி, அச்சம்

210. எல்லை, எத்தன், எண், எலி, எஃகு – அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க?
எஃகு, எண், எத்தன், எலி, எல்லை


211. ”எற்பாடு” பெயர்ச்சொல்லின் வகை அறிக?
காலப்பெயர்

212. “சாக்காடு” பெயர்ச்சொல்லின் வகை அறிக?
தொழிற்பெயர்

213. “கேடு” என்ற சொல்லின் வேர்ச்சொல் எது?
கெடு

214. “சாக்காடு” என்ற சொல்லின் வேர்ச்சொல் எது?
சா
215. “பிசிராந்தையார் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்கிறார்” – எவ்வகை வாக்கியம்?
செய்தி வாக்கியம்

216. “காந்தியடிகள் உண்மை பேசாமல் இரார்” – எவ்வகை வாக்கியம்?
பொருள் மாறா எதிர்மறை வாக்கியம்

217. வலதுபக்கச் சுவற்றில் எழுதாதே! – வழூஉச் சொல்லற்ற வாக்கியமாக மாற்று?
வலப்பக்கச் சுவரில் எழுதாதே

218. அவன் கவிஞர்கள் அல்ல – ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது?
அவன் கவிஞன் அல்லன்

219. ”திவ்வியகவி” என்ற பெயரால் அழைக்கப்படுபவர்?
பிள்ளைப்பெருமாள் அய்யங்கார்

220. மாதவியின் மகளின் பெயர்?
ஐயை

221. பாலை நில மக்களின் பாட்டு?
வேட்டுவவரி

222. செம்மொழியாக உயர்த்தப்பட்டுள்ள தமிழ்மொழி, செம்மொழி தரவரிசையில் எத்தனையாவது இடத்தைப் பெற்றுள்ளது?
எட்டாவது இடம்

223. ”தமிழ் நெடுங்கணக்கு” என்று சூட்டப்படுவது?
தமிழ் எழுத்துக்கள்

224. சிந்து, வைகை, யமுனை, கங்கை – அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க?
கங்கை, சிந்து, யமுனை, வைகை

225. அடிதோறும், சீர்தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது?
எதுகை

226. “கொன்றை வேந்தன்” என்ற நூலின் ஆசிரியர் யார்?
ஒளவையார்

227. ”கரி” எனும் சொல் உணர்த்துவது?
யானை

228. மயங்கொலி எழுத்துக்களின் எண்ணிக்கை?
8

229. சிங்கத்தின் இளமைப் பெயர்?
குருளை

230. ”யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனப் பாடியவர்?
கனியன் பூங்குன்றனார்

231. தமிழின் மிகப்பழமையான இலக்கண நூல்?
தொல்காப்பியம்

232. ”தழல்” எனும் சொல்லின் பொருள்?
நெருப்பு

233. “ஏறு போல் நட” எனக் கூறும் இலக்கியம்?
புதிய ஆத்திச்சூடி

234. “திணை” எனும் சொல்லின் பொருள்?
ஒழுக்கம்

235. கவிமணி எழுதிய நூல்கள்?
மலரும் மாலையும், உமர்கய்யாம் பாடல்கள், ஆசிய ஜோதி

236. ”தணித்தல்” என்பதன் பொருள் என்ன?
குறைத்தல்

237. முகர்ந்து பார்த்தாலே வாடும் மலர்?
அனிச்சம்

238. பத்துப்பாட்டு நூல்களில் அகமா? புறமா? என்ற சர்ச்சைக்குரிய நூல் எது?
நெடுநல்வாடை

239. ”குடவோலை முறை” பற்றிய குறிப்பினைக் கொண்ட சங்க நூல் எது?
அகநானூறு

240. ”சங்கம்” என்ற சொல்லை முதன் முதலில் வழங்கிய நூல்?
மணிமேகலை

241. தமிழில் தோன்றிய முழுமுதற் காப்பியம் எது?
சிலப்பதிகாரம்

242. குமரகுருபரர் இயற்றிய நூல்?
நீதி விளக்கம்

243. பெண்பாற் பிள்ளைத் தமிழின் பருவங்கள்?
10

244. ”பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவன்” எனப் பாராட்டப்படுபவர்?
சேக்கிழார்

245. நாலடியாரை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்?
ஜி.யூ.போப்

246. ஆரிய அரசன் பிரகத்தனுக்கு தமிழ் அறிவுறுத்தற்குப் பாடிய பாட்டு?
குறிஞ்சிப் பாட்டு

247. நேரிசையாசிரியப் பாவின் ஈற்றயலடி?
முச்சீர்

248. வெண்பாவின் வகைப்பாடு?
6

249. புறத்தினை வகைப்பாடு?
12

250. மக்கள் கவிஞர் என்றழைக்கப்படுபவர்?
பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்

தொடர்ந்து வரும்..