தெற்கு அமெரிக்கவில் உள்ள மிசிசிப்பி என்ற நகரத்தில் ஆயுள் தண்டனை அனுபவித்துக்கொண்டிருந்த இரண்டு சகோதரிகளில் ஒருவர் மற்றவருக்கு தனது கிட்னியை தானமாக கொடுத்ததால் அவர்களுடைய மனிதாபமானத்தை அறிந்து அரசு அவர்களை விடுதலைசெய்துள்ளது.
கடந்த 1994ஆம் ஆண்டு ஜாமி மற்றும் க்லடிஸ் ஸ்கொட் ஆகிய இரண்டு சகோதரிகள், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இரண்டு நபர்களிடம் வழிப்பறி செய்து $11 பணத்தை திருடியதாக கைது செய்யப்பட்டு அவர்களுக்கு ஆயுள்தண்டனை கொடுக்கப்பட்டது.
கடந்த 19 வருடங்களாக சிறையில் இருந்து வரும் அவர்களில் க்லடிஸ் ஸ்கொட் என்பவர் தனது சகோதரி ஜாமி சிறுநீரக நோயால தாக்கப்பட்டு தினமும் டயாலிசிஸ் என்ற சிகிச்சை செய்து கொண்டிருந்ததால்,.அவருக்கு சிறுநீரக தானம் கொடுக்க முன்வந்தார். பின்னர் இருவரும் பரோலில் அனுமதிக்கப்பட்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் ஜாமி நலமாக இருக்கின்றார்.
இவர்களது மனிதாபமானத்தை பார்த்த ஜெயிலர், கவர்னர், இனிமேல் இவர்களால் பொதுமக்களுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்று தான் கருதுவதாகவும், எனவே இவர்களை விடுதலை செய்ய பரிந்துரை செய்கிறேன் என்றும் கடிதம் எழுதியுள்ளார். கடிதம் கிடைத்தவுடன் மிசிசிப்பி கவர்னர் இருவரையும் தனது அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்தார்.
இந்த விடுதலை உண்மையிலேயே எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என சகோதரிகள் பெருமையாக செய்தியாளர்களிடம் கூறினர். இந்த சம்பவம் மிசிச்சிப்பி முழுவதும் பெரும் பரபரப்புடன் பொதுமக்களால் பேசப்பட்டு வருகிறது.




