34 வயது பெண் ஒருவர் தனது திருமண வாழ்க்கை போர் அடித்ததால் ஒரு பரபரப்பிற்காக தனது கணவரை கொன்று 16 துண்டுகளாக வெட்டி அந்த துண்டுகளை ஃப்ரீசரில் வைத்து ஒவ்வொன்றாக ஒவ்வொரு நாளும் எடுத்து சமைத்து சாப்பிடும் கொடூர பெண்.
இது உண்மையில் நடந்த சம்பவம் என நினைக்க வேண்டாம். Natalie Young என்ற பிரபல பெண் எழுத்தாளர் சமீபத்தில் எழுதியுள்ள நாவலின் கதைதான் இது. Season To Taste என்ற பெயருடைய இந்த நாவல் வரும் 2014ஆம் ஆண்டு ஜனவரியில் வெளியாக உள்ளது. ஆனால் இந்த புத்தகம் குறித்த பரபரப்பு இப்பொழுதே தொடங்கிவிட்டது.
பிரபல பெண் எழுத்தாளர் Natalie Young என்பவர் Season To Taste என்ற திகில் நாவல் ஒன்றை எழுதி முடித்துள்ளார். இந்த புத்தகத்தை இங்கிலாந்தில் உள்ள Tinder Press என்ற பதிப்பகம் வெளியிடுகிறது. £10.39 விலையுள்ள இந்த புத்தகம் வரும் ஜனவரி மாதம் 16ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. வெளியாவதற்கு முன்பே இங்கிலாந்து முழுவதும் இந்த நாவல் குறித்து மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்த நாவலை எழுதிய எழுத்தாளர் Natalie Young சென்ற வருடம்தான் விவாகரத்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும் தனது முன்னாள் கணவர் தனது நாவலுக்கு பெரிதும் ஒத்துழைப்பு கொடுத்தார் என்றும், அவரை என்னால் மறக்கவே முடியாது என்றும்Natalie Young தனது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.
கணவரை வெட்டி கொன்று சாப்பிடும் ஒரு பெண்தான் இந்த நாவலின் கதாநாயகி. ஆனாலும் ஒரு சில இங்கிலாந்து சமூக அமைப்புகள் இந்த நாவலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குடும்ப ஒற்றுமைகளை குலைத்து விடும் நாவலை தடை செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




