இலங்கை மக்களுக்காக புதிய விடயத்தை அறிமுகப்படுத்தும் அரசாங்கம்!!

259

அப் அறிமுகம்

திடீர் அனர்த்தங்களுக்கு அரச பாதுகாப்புத் துறையினரிடம் உடனடி பிரதிபலனை பெற்றுக்கொள்ள புதிய அப் (Emergency App) ஒன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. திடீர் விபத்துகள், தாக்குதல்கள், தற்கொலைகள், தீ பிடிப்பு, பாலியல் துஷ்பிரயோகங்கள் போன்ற சம்பவங்கள் தொடர்பாகவே இந்த அப் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இந்த அப் மூலம் உடனடி அம்பியூலன்ஸ் சேவை, தீயணைப்புச் சேவை, பொலிஸ் சேவை உட்பட அரச பாதுகாப்பின் அனைத்துச் சேவைகளையும் பெற்றுக்கொள்ள முடியுமென தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

தொலைத்தொடர்பு மற்றும் டிஜிற்றல் உட்கட்டமைப்பு அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் இது தொடர்பில் தெரிவிக்கையில்,

திடீர் விபத்துகள், தாக்குதல்கள், தற்கொலைகள், தீ பிடிப்பு, பாலியல் துஷ்பிரயோகங்கள் உட்பட அவசர பிரச்சினைகளுக்கு உள்ளானோருக்கு அரச பாதுகாப்புத் துறைக்கும் அறிவிக்கும் பொறிமுறையில் உள்ள குறைபாடுகளை புரிந்துகொண்டு அதற்கான தீர்வை முன்வைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

தமக்கு ஏற்பட்ட விபத்து தொடர்பில் பொலிஸாருக்கும், இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கும், அம்பியூலன்ஸ் சேவைக்கும் அறியப்படுத்தும் காலம் மற்றும் அதற்குப் பதிலளிக்கும் காலம் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளோம்.

1990 அம்பியூலன்ஸ் சேவை வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகிறது. தொலைப்பேசி அழைப்பு விடுத்து 12 நிமிடங்களுக்குள் குறித்த அம்புலன்ஸ் சேவையை விபத்துக்கு உள்ளான நபர் பெற்றுக்கொள்கிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.