கொழும்பில் கொச்சிக்கடை தேவாலயத்தில் குண்டு வெடிப்பு : பலர் படுகாயம்!!

1042

கொச்சிக்கடை தேவாலயத்தில் குண்டு வெடிப்பு

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் சற்று முன்னர் வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த நிலையில் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. குண்டொன்றே வெடித்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தில் குழந்தைகள் உட்பட பலர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். அத்துடன் காயமடைந்தவர்கள் நோயாளர் காவு வண்டியூடாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.

மேலும் தேவாலய பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இன்று உயிர்த்த ஞாயிறு தினம் என்பதால் பெருந்திரளான மக்கள் தேவாலயத்திற்கு ஆராதனைக்காக சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நீர்கொழும்பு, கட்டுவபிட்டி பிரதேசத்தில் செபஸ்னடியன் தேவாலயத்திலும் சற்று முன்னர் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது. இதில் பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யேசு உயிர் தெழுதநாளான இன்று இவ்வாறு 5 இடங்களில் அடுதடுத்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெறுவது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இதன்போது சம்பவம் இடம்பெற்ற எல்ல இடங்களிலும் பலர் காயமடைந்து, சிலர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.