இலங்கை சீனாவையும் ரஷ்யாவையும் நம்பி பயனில்லை : தயான் ஜயதிலக்க!!

685

dayan-jஇலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் சர்வதேச அழுத்தங்களில் இருந்து நாட்டை பாதுகாத்து கொள்ள சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளை நம்புவதில் பயனில்லை என முன்னாள் ராஜதந்திரியான தயான் ஜயதிலக்க தெரிவித்தார்.

பலம் பொருந்திய நாடுகள் இலங்கை போன்ற சிறிய நாட்டுக்காக ஒன்றுக்கு ஒன்று மோதல்களை ஏற்படுத்திக் கொள்ளாது. இதற்கு கடந்த கால உதாரணங்கள் இருக்கின்றன. எவ்வாறாயினும் சர்வதேச தலையீடுகளில் இருந்து தப்பிக்க இலங்கை தனக்காக திட்டங்களை கண்டுப்பிடிக்க வேண்டும்.

அப்படி இல்லை என்றால் எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கை எதிரான யோசனை ஒன்று நிறைவேற்றப்படுவதை தவிர்க்க முடியாது என்றும் தயான் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார்.