வடக்கில் போக்குவரத்து மற்றும் வீடமைப்பு திணைக்களங்களை அமைக்கத் தடை!!

725

SSவடக்கில் போக்குவரத்து மற்றும் வீடமைப்பு திணைக்கள அமைக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் விக்னேஸ்வரன் இவ்வாறு போக்குவரத்து மற்றும் வீடமைப்பு திணைக்களங்களை அமைக்கத் திட்டமிட்டிருந்தார்.

எனினும், இவ்வற்றை அமைக்க முடியாது என ஆளுனர் ஜீ.ஏ. சந்திரசிறி உத்தரவிட்டுள்ளார். பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் ஆளுனர் பதவிகளுக்கு தமிழர்களை நியமிக்க தமிழ் மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் முயற்சிப்பதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பான தீர்மானமொன்றை மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் மாகாணசபையில் சமர்ப்பித்து ஏகமனதாக இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புலம்பெயர் புலி ஆதரவாளர்களின் விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்ற வகையில் வட மாகாணசபையின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக திவயின வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்படுகிறது.