சிவனொளிபாத மலைக்கான யாத்திரை காலம் நேற்று ஆரம்பம்!!

488

Sivanoliசிவனொளிபாத மலைக்கான யாத்திரை காலம் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது. காலை தொடக்கம் தொடர்ச்சியாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் யாத்திரீகர்கள் அங்கு சென்ற வண்ணம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

யாத்திரை ஆரம்பமாகி ஒரு சில மணி நேரத்திற்குள் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான யாத்திரீகர்கள் வருகை தந்துள்ளனர்.
இதனிடையே இந்த பருவ காலத்தில் வருகைத்தரும் யாத்திரீகர்களின் நலன் கருதி பல முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை சிவனொளிபாத மலையை நோக்கி செய்யும் யாத்திரீகர்கள் மதுபானம், போதைப்பொருட்கள், இசை கருவிகள் மற்றும் பொலித்தீன் பைகள் போன்றவற்றை எடுத்துச் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது என பொலிஸார் அறிவித்துள்ளனர்.