லாராவின் சாதனையை சமன் செய்தார் பெய்லி!!

500

beilyஅவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் மூன்றாவது போட்டி பேர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

போட்டியின் நாலாம் நாளான நேற்றைய ஆட்டத்தின் போது இங்கிலாந்தின் ஜேம்ஸ் அண்டர்சன் பந்துவீச்சில் ஒரே ஓவரில் அவுஸ்திரேலிய நடுக்கள வீரர் பெய்லி 28 ஓட்டங்களைக் குவித்தார்.

ஆட்டத்தின் 87வது ஓவரை அண்டர்சன் வீசிய போது முதல் பந்தில் பவுண்டரியும், இரண்டாவது பந்தில் சிக்ஸரும், மூன்றாவது பந்தில் 2 ஓட்டங்களும், நான்காவது பந்தில் பவுண்டரியும், அடுத்த இரு பந்துகளில் சிக்சர்களும் அடித்து அசத்தினார். பெய்லி.

இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஓவரில் 28 ஓட்டங்களை குவித்த மேற்கிந்திய வீரர் லாராவின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.