சாதனை படைத்தும் சோதனையில் முடிந்த சோகம்!!

472

cookவரலாற்றிலேயே யாருக்கும் கிடைத்திராத அரிய பரிசு ஒன்று இங்கிலாந்து அணித்தலைவர் அலெஸ்டர் குக்குக்கு கிடைத்துள்ளது.

அவுஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளும் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்று வருகிறது.

இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இங்கிலாந்து அணித்தலைவர் குக் 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.
இந்தப் போட்டியில் நுழைந்தபோது சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார்.

அதாவது மிகவும் இளம் வயதில் 100 டெஸ்ட் போட்டியில் ஆடிய வீரராக இதுவரை சச்சின்தான் இருந்தார் அதை தற்போது குக் முறியடித்துள்ளார். ஆனால் அவரது சந்தோஷம் சில மணி நேரம் கூட நீடிக்கவில்லை.

காரணம் 2வது இன்னிங்ஸில் குக் டக் அவுட் ஆகி விட்டார். உலக டெஸ்ட் வரலாற்றில் 100வது டெஸ்ட் போட்டியில் டக் அவுட் ஆன முதல் வீரர் என்ற பெயரும் குக்குக்குக் கிடைத்துள்ளது.

இதற்கு முன்பு விளையாடிய 99 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் டக் அவுட் ஆனதே இல்லை. அதாவது முதல் பந்திலேயே அவர் ஆட்டமிழந்தது இல்லை இதுதான் முதல் முறையாம். இருப்பினும் முதல் இன்னிங்ஸில் குக் 72 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.