போராட்டத்திற்கு மத்தியில் பொலிசை முத்தமிட்ட பெண்!!

609

Policeஇத்தாலியில் பொலிஸ் அதிகாரியை முத்தமிட்ட மாணவி மீது பாலியல் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தாலியில் மிலன் நகரில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரீசுக்கு அதிவேக ரெயில் விடப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இத்தாலியில் கடந்த மாதம் மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினார்கள். இதில் கலந்து கொண்ட நீனா டி சிப்ரீ என்ற மாணவி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி சால்வடோர் பிசியோன் என்பவரை முத்தமிட்டார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து குறித்த பெண் நீனா மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.