தனக்கு விருப்பமான சான்ட்விச் கிடைக்காததால் விமானத்தை இயக்க மறுத்த விமானியால் பரபரப்பு ஏற்பட்டது.
பாகிஸ்தானின் லாகூர் விமான நிலையத்தில் இருந்து கடந்த 14ம் திகதி காலை 6:45 மணிக்கு நியூயோர்க் செல்ல வேண்டிய விமானம் புறப்படத் தயாராக இருந்தது. ஆனால் அந்த விமானத்தின் உணவு பட்டியலில் விமானி நவுஷாத்துக்கு விருப்பமான சான்ட்விச் இடம் பெறவில்லை.
சான்ட்விச் வந்தால் தான் விமானத்தை இயக்குவேன் என பிடிவாதமாக கூறியதால் கராச்சியில் உள்ள விமானத் துறை தலைமை அலுவலகத்திற்கு விமானியின் கோரிக்கை குறித்து அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து சான்ட்விச்சை கொடுக்கும்படி கேட்டரிங் துறைக்கு உத்தரவிடப்பட்டது,
சான்ட்விச் வந்து சேர்ந்த பின் வழக்கத்தை விட ஒன்றரை மணி நேரம் தாமதமாக விமானம் நியூயோர்க் புறப்பட்டு சென்றது.





