விஜயகாந்த் வீட்டின் முன் அரை நிர்வாணமாக சுற்றித் திரிந்த நபரால் பரபரப்பு!!

721

Vijayakanthஅரை நிர்வாணத்துடன் தே.மு.தி.க. கொடி வண்ணத்தை உடலில் பூசிக் கொண்டு விஜயகாந்த் வீட்டின் முன் சந்தேகப்படும்படியாக சுற்றிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் வீடு சென்னை விருகம்பாக்கம் கண்ணபிரான் கொலனியில் உள்ளது. இங்கு நேற்று காலை 8:00 மணியளவில் சந்தேகப்படும்படியாக ஒருவர் சுற்றித் திரிந்தார்.

தே.மு.தி.க. கரைவேட்டி கட்டி இருந்தார். சட்டை அணியாமல் அரை நிர்வாணத்துடன் இருந்த அவரது உடலில் தே.மு.தி.க., கொடியின் வண்ணம் பெயின்ட் செய்யப்பட்டிருந்தது.

விஜயகாந்தின் வீட்டிற்கு வெளியே பாதுகாப்பில் இருந்த பொலிஸார் ஒரு மணி நேரம் அவரை கவனித்தனர். பின் விருகம்பாக்கம் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த பொலிசார் அந்த நபரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். விசாரணையில் அவர் சென்னை பெருங்குடி, திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ரமேஷ் 36 என்பது தெரிந்தது.

சமீபத்தில் அவரது வீடு இடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விஜயகாந்திடம் தெரிவிக்க வந்துள்ளார். விஜயகாந்த் வீட்டில் இருந்து வெளியே வருவார் என கருதி அங்கு சுற்றி வந்துள்ளார்.

நடந்த சம்பவங்களை பொலிசார் அவரிடம் எழுதி வாங்கினர். மீண்டும் விஜயகாந்த் வீடு முன் சுற்றி திரிந்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவத்தால் விஜயகாந்த் வீட்டின் முன் பரபரப்பு ஏற்பட்டது.