வவுனியாவில் அனாதரவாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வண்டியால் பரபரப்பு!!

774

வவனியா குட்செட் வீதியில் அமைந்துள்ள கருமாரியம்மன் ஆலயத்திற்கு அருகில் அநாதரவான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வண்டியை எவரும் உரிமை கோராத நிலையில் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சுமார் மூன்று மணிநேரத்திற்கு மேலாக அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் விசேட அதிரடிப்படையினரின் குண்டு செயலிழக்க வைக்கும் பிரிவினரின் உதவியை கோரியிருந்தனர்.

இந்நிலையில் மோட்டார் வண்டியின் இலக்கத்தை வைத்து விசாரணையை மேற்கொண்ட பொலிசார் உரிமையாளரை அடையாளம் கண்டதுடன் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மோட்டார் வண்டி உரிமையாளரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.