ஆஷஸ் டெஸ்ட் தொடரை வெற்றிபெற்றது அவுஸ்திரேலியா!!

486

australia_englandவரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலியா வென்றுள்ளது. அவுஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதலிரண்டு டெஸ்டில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது.

இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் பெர்த்தில் தொடங்கியது இதில் முதல் இன்னிங்சில் 385 ஓட்டங்கள் எடுத்தது. இதனை அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 251 ஓட்டங்கள் எடுத்தது.

இதன் பின்பு 2வது இன்னிங்சை ஆடிய அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 369 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டத்தை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

இதனை தொடர்ந்து 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 103.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 353 ஓட்டங்கள் எடுத்தது. இதனால் 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது.

மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா வெற்றிபெற்றதுடன், தொடரையும் கைப்பற்றியுள்ளது.