தமன்னா- ஹன்சிகா திடீர் மோதல்!!

648

Tamanaதமன்னா, ஹன்சிகா இடையே திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது. ஹன்சிகா, தமிழ் தெலுங்கில் பிசியாக நடிக்கிறார். தமிழில் வாலு, அரண்மனை, வேட்டை மன்னன், மான்கராத்தே, உயிரே உயிரே என ஐந்து படங்கள் கைவசம் உள்ளன.

தெலுங்கில் மூன்று படங்களில் நடிக்கிறார். இதனால் தன்னை நம்பர் 1 நடிகையாக அவர் கருதுகிறார். எட்டு படங்களில் நடிக்கிறேன். சினிமாவில் நான் பிசியாக இருக்கிறேன் என்று தன்னைப் பற்றி ஹன்சிகா சமீபத்தில் பெருமையாக சொன்னார்.

ஆனால் தமன்னாவுக்கு இவ்வளவு படங்கள் இல்லை. ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடிக்கிறார். ஹன்சிகா நிறைய படங்கள் கைவசம் உள்ளதாக பேட்டி அளித்தது தமன்னாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. ஹன்சிகாவுக்கு அவர் பதிலடி கொடுத்தார்.

தமன்னா கூறும்போது கைவசம் எவ்வளவு படங்கள் இருக்கிறது என்ற எண்ணிக்கை முக்கியம் அல்ல. ஹிட் படங்களில் நடிக்கிறோமா என்பது தான் முக்கியம். படங்களின் வெற்றிதான் நம்பர் வன் நடிகை யார் என்பதை தீர்மானிக்கிறது என்றார்.

தன்னை மனதில் வைத்து தான் தமன்னா இப்படி கருத்து சொல்லி இருப்பதாக ஹன்சிகா நெருக்கமானவர்களிடம் ஆவேசப்பட்டு பேசி வருகிறாராம்.