வரவு செலவுத் திட்டங்களை தோற்கடித்த ஆளும் கட்சி உறுப்பினர் பற்றி இன்று தீர்மானம்!!

314

UPFAஉள்ளுராட்சி மன்றங்களின் வரவு செலவுத் திட்டங்களை தோற்கடித்த ஆளும் கட்சி உறுப்பினர்கள் பற்றிய தீர்மானம் இன்றைய தினம் எடுக்கப்பட உள்ளது.

உள்ளுராட்சி மன்றங்களின் வரவு செலவுத் திட்டங்களை தோற்கடித்த கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு எதிராக எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது இன்று அறிவிக்கப்படும்.

குறித்த உறுப்பினர்களின் உறுப்புரிமையை ரத்து செய்வதா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய செயற்குழு மற்றும் கூட்டபைம்பின் நிறைவேற்றுக்குழு ஆகியன இன்று ஜனாதிபதி தலைமையில் கூட உள்ளன.

வரவு செலவுத் திட்டத்தை தோற்கடித்த உறுப்பினர்களின் உறுப்புரிமையை இடைநிறுத்துமாறு சில முக்கிய அமைச்சர்கள் கோரியுள்ளனர்.மேலும் சிலர் உறுப்புரிமையை ரத்து செய்யுமாறு கோரியுள்ளனர்,