வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரின் சடலம் மீட்பு!!

568

வவுனியா ஆச்சிபுரம் முதலாம் ஒழுங்கை பகுதியிலிருந்து இன்று (07.05.2019) அதிகாலை இரண்டு பிள்ளைகளின் தாயொருவரின் சடலத்தினை வவுனியா பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

ஆச்சிபுரம் முதலாம் ஒழுங்கையில் குறித்த பெண் அவரது இரு பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். வேலை நிமித்தம் புதுக்குடியிருப்புக்கு சென்றிருந்த அவரது கணவர் நேற்றையதினம் வீடு திரும்பிய சமயத்தில் இன்று அதிகாலை குறித்த பெண் வீட்டிற்கு முன்பாகவுள்ள மரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.

10 மற்றும் 6 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயான 32 வயதுடைய சதீஸ்குமார் நவநீதமலர் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற கிராம சேவையாளர் , வவுனியா பொலிஸாருடன் இணைந்து தடவியல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.