திமுக தனித்துப் போட்டி : கருணாநிதி அறிவிப்பு!!

744

Karunanidhiவரும் மக்களவைத் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்தார். கோபாலபுரம் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை தன்னைச் சந்தித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்..

கேள்வி : பாராளுமன்றத்தில் லோக்பால் மசோதாவை திமுக ஆதரிக்குமா?

பதில்: இந்த மசோதா விவாதத்துக்கு வரும்போது என்ன செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற திமுக குழுவின் தலைவர் டி.ஆர். பாலுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்போது உங்களுக்கும் தெரியும்.

கேள்வி : திமுக தலைமையில் தமிழகத்தில் 3வது அணி அமையும் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் காதர் மொகிதீன் கூறியிருக்கிறாரே?

பதில் : மகிழ்ச்சி.

கேள்வி :- காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து திமுக ஏற்கெனவே விலகிவிட்டதாகவும், மக்களவைத் தேர்தலுக்காக ஆதரவு கேட்டு திமுகவுக்கு எந்த கடிதமும் எழுதவில்லை என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகள் கூறியிருப்பது பற்றி..

கலைஞர் : இதன் மூலம் நீங்களே தெரிந்து கொண்டிருக்கலாம். காங்கிரசை விட்டு விலகியதற்கு வேறு காரணம் தேவையில்லை என்று ஞானதேசிகனே சொல்லி விட்டார். அதற்காக அவருக்கு நன்றி.

கேள்வி :- தமிழகத்தில் காங்கிரஸ், பாஜக கூட்டணி இல்லை என்றால், திமுக தனித்துப் போட்டியிடப் போகிறதா?

பதில் : ஆமாம். ஏற்கனவே எங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிடுவோம்.

கேள்வி : கூட்டணிக்காக திமுக அழைப்பு விடுத்தால் பரிசீலிப்போம் என பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறாரே?

பதில்: பாஜகவை அழைப்பதாக நாங்கள் முடிவு செய்யவில்லை என்றார் கருணாநிதி.