வவுனியா தெற்கு பிரதேச சபையில் வட்டாரத்தின் தேவைகளை முதன்மை அடிப்படையில் தெரிவு செய்ய வாக்கெடுப்பு!!

573

வவுனியா தெற்கு பிரதேசசபைக்குட்பட்ட 13 வட்டாரங்களிலும் முன்னுரிமை அடிப்படையில் அடையாளங்காணப்பட்ட தேவைகளை வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யும் கூட்டம் வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம் தலைமையில் இன்று (07.05.2019) காலை 10 மணியளவில் இடம்பெற்றது.

வட்டார அடிப்படையிலான பொதுமக்களினால் அடையாளம் காணப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக முதன்மை அடிப்படையில் வட்டாரங்கள் தெரிவு செய்யும் கூட்டத்தில் பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச சபை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பிரதேசசபைக்குட்பட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது தெரிவு செய்யப்பட்ட வேலைத்திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன் முதன்மை வேலைத்திட்டத்தின் வாக்கெடுப்பு நடவடிக்கையும் இடம்பெற்றிருந்தது.

முதல் சுற்று வாக்கெடுப்பின் போது முதலாவது வேலைத்திட்டமாக சமயபுரம் – சுந்தரபுரம் பாடசாலை வீதி தார் இடல் – 6 கிலோமீற்றர் வேலைத்திட்டம் தெரிவுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.