தொடர்ந்து 30 மணிநேரம் வேலை செய்த இளம் பெண் மரணம்!!(வீடியோ)

607

Mitaஇந்தோனேஷியாவில் தொடர்ந்து 30 மணிநேரம் வேலை செய்து கொண்டிருந்த இளம் பெண் ஒருவர் பரிதாபமாக பலியானார்.

இந்தோனேஷியாவை சேர்ந்த மிதா திரான் என்ற பெண் கொப்பிரைட்டராக வேலை செய்து கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து 30 மணி நேரமாக டிவிட் செய்து வந்தவர் திடீரென அலுவலகத்தில் தனது இருக்கையிலேயே மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால் அடுத்த நாள் பரிதாபமாக உயிரிழந்தார்.

இவர் கடைசியாக போட்ட போஸ்ட்டிங் , 30 மணி நேரமாக வேலை பார்க்கிறேன். இன்னும் உறுதியுடன் இருக்கிறேன் என்பது தான்.

மிதாவின் மரணத்திற்கு என்ன காரணம் என்பது தெரிவிக்கப்படவில்லை. ஆனால் நீண்ட நேரம் பணியில் ஈடுபட்டிருந்ததே அவரது மரணத்திற்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.

இதுகுறித்து விளம்பர நிறுவனத்தின் பொது மேலாளர் எனி வித்யாத்தி கூறுகையில் மிகவும் திறமையான கொப்பிரைட்டர் மிதா. அவர் என்றென்றும் எங்களது இதயங்களில் வாழ்வார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இது எங்களுக்கு மிகப் பெரிய இழப்பு, அதிர்ச்சிச் சம்பவமாக இது அமைந்துள்ளது. மிதாவின் குடும்பத்தினருக்கு எப்படி இரங்கல் சொல்வது என்றே தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.