சுயநலவாதி பீட்டர்சன் : முன்னாள் வீரர் கடும் தாக்கு!!

501

Kevinஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து இழந்துள்ளது.

அவுஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது.
இத்தொடரின் ஆரம்பம் முதலே இங்கிலாந்து அணியினரின் ஆட்டம் மிக மோசமாக இருந்து வருகிறது.

3-0 என்ற கணக்கில் தொடரை கைவிட்டு விட்டதால் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சனை, முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ஜெப்ரி போய்கொட் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், பீட்டர்சன் தனது விக்கெட்டை மிகவும் எளிதாக இழந்தார், லோங் ஓன் திசையில் தூக்கி அடித்து ஆட்டமிழந்தார். தேவையில்லாத அந்த ஷொட்டை அடித்து, அதுவும் அந்த திசையில் பீல்டர் இருப்பதை அறிந்து ஆடியது மிகவும் மோசமானதாகும்.

விக்கெட் கீப்பர் பிரட் ஹடின் கூறியபடி கிளார்க் பீல்டிங் வியூகம் அமைத்தார். இதையெல்லாம் அறியாமல் பீட்டர்சன் ஆடியது ஆச்சரியமானது, அவரது மூளை மழுங்கிவிட்டது.

அவர் கவனமுடன் விளையாடவில்லை, இதனை பார்க்கும் போது சுயநலமாக நடந்து கொண்டார் என்று தெரிவித்துள்ளார்.