இங்கிலாந்து இளவரசர் ஹரியுடன் ஓடி புகழ்பெற்ற உலகின் அதிவேக வீரர் உசைன் போல்ட் பேருந்துடனான ஓட்டப் பந்தயத்தில் ஓடினார்.
ஆஜென்டினா நாட்டின் தலைநகரான பியூனஸ் அயர்சில் நடைபெற்ற காட்சி போட்டியின் 80 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் பேருந்துடன் போட்டிபோட்ட ஆறு முறை உலக சாம்பியனான உசைன் போல்ட், தீவிரமாக எடுத்துக் கொண்டு மிக கவனத்துடன் ஓடி வெற்றி பெற்றார்.
போட்டியில் கலந்துகொண்ட 59 என்ற எண் கொண்ட பேருந்தை கண்டவுடன் அதை வெற்றி கொள்ள சிறப்பு முயற்சி ஏதும் செய்யத் தேவையில்லை என போல்ட் புரிந்துகொண்டார்.
ஒலிம்பிக்கில் தொடர்ந்து இரு முறை 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 4×100 மீட்டர் ஒட்டத்தில் தங்கம் வென்ற போல்ட் 2016ல் ரியோவில் நடைபெற உள்ள போட்டியுலும் இவ்வெற்றியை தக்க வைத்துக்கொள்ள தயாராகி வருவதாக கூறியுள்ளார்.





