உயிரிழந்த கணவன்.. தான் விதவையானது கூட தெரியாமல் இளம்பெண் மேற்கொண்ட செயல் : மனதை உருக்கும் சம்பவம்!!

29


இந்தியாவில் கணவர் உயிரிழந்தது கூட தெரியாமல் இளம்பெண் வாக்குசாவடிக்கு சென்று வாக்களித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்தியாவில் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பல்வேறு மாநிலங்களில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

அப்படி மேற்கு வங்கத்தில் உள்ள கோபிபல்லவ்பூர் கிராமத்தில் இரு தினங்களுக்கு முன்னர் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் ஓட்டு போட ஞாயிறு காலை பசந்தி என்ற இளம் பெண் வீட்டிலிருந்து கிளம்பி சென்றார்.ஆனால் அதற்கு முன்னரே மருத்துவமனையில் இருந்த அவரது கணவர் ராமன் உயிரிழந்துள்ளார், தான் விதவையாகி விட்டோம் என்பதை அறியாத பசந்தி ஓட்டு போட்டு விட்டு வீட்டுக்கு வந்தபின்னர் தான் கணவர் இறந்தது அவருக்கு தெரியவந்தது.

இதன் பின்னர் மருத்துவமனையின் பிணவறைக்கு சென்று கணவரின் சடலத்தை பார்த்து பசந்தி கதறி அழுதார். இது குறித்து பசந்தியின் மைத்துனர் ஹீரன் கூறுகையில், ராமன் பாஜக கட்சியில் உள்ளார், அவர் வாக்குச்சாவடி பணியில் சனிக்கிழமை இரவு இருந்த போது மர்ம நபர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர்.


இதன்பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், இதையடுத்தே அவர் உயிரிழந்தார் என கூறியுள்ளார். சம்பவம் தொடர்பாக பொலிசார் கூறுகையில், ராமன் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் பெருமூளையில் காயம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது, இது தொடர்பாக விசாரித்து வருகிறோம் என கூறியுள்ளனர்.