இனப்பிரச்சினைக்கு முதற்காரணம் மொழி : அப்பாத்துரை விநாயகமூர்த்தி!!

732

அப்பாத்துரை விநாயகமூர்த்திமொழி காரணமாகவே இனப்பிரச்சினை ஏற்ட்டது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.

1956ம் ஆண்டுக்கு முன்னதாக இலங்கையில் இனப்பிரச்சினை இருக்கவில்லை. தனிச் சிங்கள மொழிச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் பின்னரே முரண்பாடுகள் ஏற்பட்டது. இரண்டு இனங்கள் ஒரு மொழி என்ற அடிப்படையில் பிரச்சினைகள் உருவாகின என்றார்.

இதேவேளை போரினால் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்ந்தும் மீள்குடியேற்றப்படாத நிலையில் காணப்படுகின்றனர்.

போரினால் இடம்பெயர்ந்த பலர் இன்னமும் உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்கியிருக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களை மீள் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.