தமிழ் தேசிய முன்னணி தலைமையில் “உதவும் நெஞ்சங்கள் கனகராயன்குளம்”நற்பணிமன்றம் உதயம்!!

806

thusa (3)“உதவும் நெஞ்சங்கள் கனகராயன்குளம்” என்ற நற்பணிமன்றம் ஒன்றை இன்று (18.12.2013) தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் துஸ்யந்தன்அவர்கள் கனகராயன்குளத்தில் ஆரம்பித்து வைத்த நிகழ்வுவொன்று இடம்பெற்றுள்ளது.

“உதவும் நெஞ்சங்கள் கனகராயன்குளம்” என்ற நற்பணிமன்றத்தின் தலைவராக சி.சியாந்தன், செயலாலர் யோ.நிதர்சன், உபதலைவர், ஆ.சசிநாத், உபசெயலாளர் அனோசன், பொருளாளர் சி.நிலக்சன், அவர்களும் தெரிவுசெய்யபட்டனர்.

மேலும் நிர்வாகசபை உறுப்பினர்களாக கஜிவன், அருந்தவன், தவநீதன், மிதுர்சன், சதீஸ்குமார், சுதர்சன், சுஜிதன், தர்சன், சிறிகாந், தனுசன், பார்தீபன், கன்ஸ்ரன், மற்றும் வி தர்சன் அவர்களும் தெரிவுசெய்யபட்டனர்.

இன்நிகழ்வில் கருத்து தெரிவிக்கும்போது தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் துஸ்யந்தன் தெரிவித்ததாவது நாங்கள் 1999ம் ஆண்டு தொடக்கம் 2003 காலப்பகுதிவரை சமுகப் பொருளாதார நிறுவனம் என்ற நிறுவனத்தை உருவாக்கி வடக்கு கிழக்கு உட்பட பல பாரிய செயல்திட்டங்களையும் வறிய மக்களுக்கு பலதரப்பட்ட உதவிகளை செய்துவந்தோம்.

மீண்டும் 2003ம் ஆண்டுக்கு பிற்பட்ட காலப்பகுதியில் ஈரோஸ் அமைப்பு மூலமாகவும் சுயமாகவும் குறிப்பாக வன்னிப்பகுதியில் பாடசாலை மாணவருக்கான உதவிகள் வறிய மக்களுக்கான உதவிகள் எனவும் அரசியல் ரீதியாகவும் மக்களுக்காக இன்றுவரை சேவையாற்றிவருகின்றோம்.

மேலும் எமது சேவை வலுப்படுத்துமுகமாக “உதவும் நெஞ்சங்கள் கனகராயன்குளம்” என்ற நற்பணிமன்றத்தை ஆரம்பித்து வறிய மாணவர்களின் கல்வியையும் வறிய மக்களின் பொருளாதாரத்தையும் மேலுயர்த்துவதே எமது முக்கிய குறிக்கோளாகும் எனக்குறிப்பிட்டார்.