காதல் விவகாரம் : புத்தளத்தில் 15 வயது சிறுமி கடத்தல்!!

704

kidnapபுத்தளத்தில் 15 வயதான சிறுமியை கடத்திச் சென்ற சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் பிரதேசத்தை சேர்ந்த சிறுமியே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளார். தன்னுடன் கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள வந்த சிறுமி இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டதாக தாய் பொலிஸில் செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தனது மகள் காதல் தொடர்பை வைத்திருந்தாகவும் அதனை தான் விரும்பவில்லை எனவும் தாய் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

மகளுடன் காதல் தொடர்பில் இருந்தவரின் முழுமையான பெயர் தனக்கு தெரியாது எனவும் சுது என அழைக்கப்படுவதாக மட்டுமே அறிந்திருந்தாகவும் தாய் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேக நபர் கடத்திச் சென்றதாக கூறப்படும் சிறுமி இதுவரை கண்டுப்பிடிக்கப்படவில்லை. புத்தளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.