வவுனியா புதுக்குளம் சித்தி விநாயகர் ஆலயத்தின் சித்திரத் தேர் மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம்!!

3


அடிக்கல் நாட்டு வைபவம்


வவுனியா புதுக்குளம் சித்தி விநாயகர் ஆலயத்தின் சித்திரத் தேர் மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம் இன்று வெள்ளிக்கழமை (17.05.2019) நடைபெற்றது 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த புதுக்குளம் சித்தி விநாயகர் ஆலயத்தின் சித்திரத் தர் செய்யபட்டிருந்த நிலையில் அத்தேர் மண்டபத்திர்கான அடிக்கல் நாட்டு வைபவம் இன்று நடைபெற்றது.முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சத்தியலிங்கம் அவர்களும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களும் முதல் அடிக்கல்லை நாட்டிவைத்தனர்

பாராளுமன்ற உறுப்பினர்களது நிதி ஒதுக்கீட்டின் மூலமும் மக்கள் பங்களிப்புடனும் 6 மில்லியன் ரூபா செலவில் 30 அடி உயர மண்டபம் நிர்மாணிக்கப்படவுள்ளது


வவுனியா மாவட்டத்தில் புரதான விவசாயக் கிராமமான புதுக்குளம் கிராமத்தில் அமையப்பெற்ற சித்தி விநாயகர் ஆலயத்தின் நான்காவது குப்பாவிசேகம் 2014ஆம் ஆண்டு நடைபெற்றிருந்தது. இவ்வரலாற்று சிறப்புமிக்க ஆலையத்திற்கு சித்திர தேர் வருவதையிட்டு மக்கள் மகிழ்வுடனுள்ளனர்

இந்நிகழ்வின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.