வவுனியாவில் முள்ளிவாய்க்கால் பேரவல 10ம் ஆண்டு நினைவேந்தல்!!

3


10ம் ஆண்டு நினைவேந்தல்


முள்ளிவாய்க்கால் பேரவல 10 ம் ஆண்டு நினைவேந்தல் வவுனியா அருள்மிகு ஸ்ரீ துர்கை அம்மன் ஆலயத்தில் இன்று (18.05.2019) காலை 9 மணியளவில் இடம்பெற்றது.ஆலய நிர்வாகத்தினரும் தமிழ்விருட்சம் அமைப்பினரும் இணைந்து நடாத்திய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் முள்ளிவாய்க்காலில் தமது கணவனை, பிள்ளைகளை , உறவுகளை இழந்த 10 குடும்பங்களின் பங்குபற்றலோடு அநியாயமாக கொல்லப்பட்ட அந்த உறவுகளின் ஆத்ம சாந்திக்கு விசேட பூசையும், மோட்ச அர்ச்சனையும் , நெய்தீபம் ஏற்றி வழிபடும் நிகழ்வும் உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.


இறுதி யுத்தத்தின் போது எமது மக்கள் அருந்திய உப்பு அற்ற கஞ்சியினை அனைவரும் அருந்தினார்கள். இறுதியில் முள்ளிவாய்க்காலில் தமது உறவுகளை இழந்த பத்து குடும்பத்தினருக்கு தமிழ் விருட்சம் அமைப்பினரினால் உலர்உணவு பொருட்கள் அடங்கிய பொதியும் வழங்கி வைக்கப்பட்டது.


இவ் நினைவேந்தல் நிகழ்வில் ஆலய நிர்வாகத்தினர், தமிழ் விருட்சம் அமைப்பினர், வர்த்தகர்கள், பிரதேச கலாச்சார உத்தியோகத்தர், நகரசபை உறுப்பினர், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.