வவுனியாவை சேர்ந்த முதியவரின் சடலம் மன்னாரில் மீட்பு!!

600

deadமன்னார் – மடு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோவில் புளியங்குளம் பிரதேசத்தில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை ஆணொருவரின் சடலத்தினை மடு பொலிஸார் மீட்டுள்ளனர்.

வவுனியா கல்மடு கிராமத்தை சேர்ந்த சண்முகம் தியாகராசா வயது 54 என்ற குடும்பத்தரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இம் மரணம் தொடர்பான விசாரணைகளை மடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.