முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்க மாட்டோம் : தமிழக அரசு உத்தரவாதம்!!

380

mullivaaikalமுள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்க மாட்டோம் என்று தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், விளார் கிராமத்தில் இலங்கையில் நடந்த உள்ளாட்டு போரில் பலியான ஈழ தமிழர்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற நினைவு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இது விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக விளார் பஞ்சாயத்து நிர்வாகம் விளக்கம் கேட்டு அறிவித்தல் அனுப்பியது. அந்த அறிவித்தலை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பழ.நெடுமாறன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் அக்னிகோத்ரி, சசிதரன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் சோமயாஜி ஆஜராகி முள்ளிவாய்க்கால் முற்றம் விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ளதாக அனுப்பப்பட்டுள்ள அறிவித்தலின் அடிப்படையில் இடிப்பு நடவடிக்கை எதுவும் மேற்கொள்ள மாட்டோம் என்று உத்தரவாதம் அளித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அந்த நினைவு கட்டடம் விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ளதா என்பதை விளார் பஞ்சாயத்து அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.