வவுனியாவில் இளைஞனிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் மீட்பு!!

543

ஹெரோயின்  மீட்பு

வவுனியா கற்குழி பகுதியில் இன்று மதியம் இளைஞன் ஒருவரை ஹெரோயின் போதைப் பொருட்களுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர அபேயவிக்கிரம தலைமையில் கீழ் செயற்படும் புலனாய்வுப் பிரிவுடன் போதை ஒழிப்புப்பிரிவினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின்போது இன்று மதியம் கற்குழிப்பகுதியில் 510 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப் பொருளினை உடமையில் வைத்திருந்த குற்றத்திற்காக 23வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளர்.

கைது செய்யப்பட்ட இளைஞனிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்