நடிகை அஞ்சலி மீதான வழக்கு ஜனவரி 10ம் திகதிக்கு தள்ளிவைப்பு!!

1512

Anjaliஅங்காடித் தெரு உள்ளிட்ட தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை அஞ்சலி. இவர் தனது சித்தி பாரதிதேவியும், இயக்குனர் களஞ்சியமும் தன்னை கொடுமைப்படுத்தி சொத்துகளை அபகரிக்க முயல்வதாக கூறி இருந்தார்.

இந்த புகார் தன் மீது கூறப்பட்ட அவதூறு என்றும், பொய்யான புகாரை கூறிய நடிகை அஞ்சலி மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்து தண்டிக்க வேண்டும் எனவும் கூறி இயக்குனர் களஞ்சியம் தரப்பில் அவரது வக்கீல்கள் ஜெயபிரகாஷ், சுரேஷ்பாபு ஆகியோர் சைதாப்பேட்டை பெருநகர 17வது கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

நேற்று இந்த வழக்கு மீதான விசாரணை 17வது கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு முன் வந்தது. அப்போது இந்த வழக்கை ஜனவரி மாதம் 10ம் திகதிக்கு தள்ளி வைத்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.