நடுவானில் பிறந்த சுட்டிப் பையன்!!

1025

babyஸ்பெயினில் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.

ஸ்பெயின் நாட்டின் வாலன்சியாவில் இருந்து ருமேனியா தலைநகர் புசாரெஸ்டிற்கு விஸ் என்ற நிறுவனத்தின் விமானம் நேற்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் கர்ப்பிணி ஒருவர் உள்பட ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர்.

அப்போது நடுவானில் பறந்து கொண்டிருந்த போது கர்ப்பிணிக்கு, திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுகுறித்து விமானிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவுடன், ருமேனியாவின் ஒடோபெனி விமானநிலையத்தில் தரையிறக்க முயன்றார்.

அதற்குள் பெண்ணிற்கு பிரசவவலி அதிகமானதால் பயணிகள் சிலர் உதவியுடன் பிரசவம் பார்க்கப்பட்டது. இதனால் விமானம் தரையிறங்குவதற்கு முன்பாகவே அழகான ஆண் குழந்தை பிறந்தது.

விமானம் தரையிறங்கியதும் விமானநிலையத்தில் காத்திருந்த மருத்துவ குழுவினர் தாயையும், சேயையும் அம்புலன்ஸ் மூலம் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

விமானத்தில் பிரசவமான பெண்ணின் பெயர் வயது, எந்த நாட்டை சேர்ந்தவர் என்ற விவரத்தை விமான நிறுவனம் தெரிவிக்கவில்லை.